தன்மானம்
அரசியல சீரமைப்பைவிட சமூக சீரமைப்பு மிகவும் அவசியம் என்றார் அம்பேத்கர். அதைப்போலவே பெரியாரும் அரசியலில் ஈடுபடாமல் மக்களை மேன்மையடையச் செய்ய இறுதிவரை உழைத்தார் அவர்களின் கொள்கைகளுக்கு வலு சேர்க்கும் வண்ணம் சமூகத்திற்கு உழைக்கும் தோழர்களிடம் தொடர்பு ஏற்படுத்துவதே இவ்வலைப்பூவின் நோக்கம்
Friday, June 24, 2011
வளர்ச்சியா? ஆதிக்கமா?
2011 ஆம் ஆண்டிற்கான மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மதிப்பெண் தர வரிசைப் பட்டியல் இவ்வாரம் வெளியிடப்பட்டது. தினமலர் (23.6.11) பின்னேறியவர்களில் முன்னேறியவர்கள் என்ற தலைப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. குறிப்பாக மருத்துவக் கல்லூரி தரவரிசைப் பட்டியலைப் பார்க்கும் போது இது உண்மைதானோ என எண்ணத் தோன்றுகிறது. அனைத்து வகுப்பினரும் போட்டியிடும் பொதுப் போட்டிக்கான இடங்கள் அதாவது 31 சதவீத இடங்களை பெரும்பாலும் பிற்பட்ட வகுப்பினரே(B.C) ஆக்கிரமித்துக்கொண்டனரோ என எண்ணத் தோன்றுகிறது. அதாவது முதல் 100 இடங்களில் 9பேர் மட்டுமே முற்பட்ட வகுப்பினரும், ஒரே ஒரு இடத்தை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவரும் உள்ளனர். மற்ற 90 இடங்களில் பி.ப வகுப்பினரே(BC,MBC,BCM) உள்ளனர். இது திறந்த போட்டியில் ஆகும் இதற்கு பின் 50% இடங்கள் பி.ப வகுப்பினருக்கே வழங்கப்பட உள்ளது. இதே நிலைதான் பொறியியல் கல்லூரியிலும் முதல் 19 இடங்களில் 15 இடங்களில் பி.ப வகுப்பினரும் 3 இடங்களில் மு.ப வகுப்பினரும் ஒரே ஓர் இடத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் வந்துள்ளனர். இதைப் பார்க்கும் போது உயர் கல்வியில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த பார்ப்பனர்களை பின்னுக்கு தள்ளியதைப் போல இருந்தாலும், இன்னும் மேலே வர வேண்டிய SC பிரிவினரும் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் அவர்களுக்கென உள்ள ஒதுக்கீட்டைத்தவிர ஒரு சில இடங்களையே பொதுப் போட்டியில் அவர்களால் பெற முடிந்துள்ளது. 1800 மருத்துவ இடங்களில் கிட்டத்தட்ட 1400 இடங்களையும் 1,20,000 பொறியியல் இடங்களில் 80,000 இடங்க்ளையும் பி.ப வகுப்பினரே ஆக்கிரமிப்பு செய்துவிடுவார்கள். இது ஓர் கல்வி ஆக்கிரமிப்போ என எண்ணத்தோன்றுகிறது. ஏற்கெனவே ஆதிக்க சாதியினரல் தீண்டாமைக் கொடுமைக்கு நவீன வடிவத்திலும் வழமையான வடிவங்களில்லும் சாதி கொடுமையை அனுபவிக்கும் SC பிரிவினர் உயர் கல்வியில் பி.ப வகுப்பினரின் இவ்வளர்ச்சிப் போக்கால் மேலும் பின்னுக்குத் தள்ளப்படக்கூடிய நிலை வரலாம். கடுமையான எண்ணிக்கையில் பின் தங்க நேரிடலாம் ஆகவே அரசும் படித்து நல்ல பணியில் உள்ளவர்கள் SC மாணவர்களை உயர் கல்விக்கு மேலும் தகுதி படைத்தவர்களாக உருவாக்க உரிய பயிற்சியை அளிக்க ஆவன செய்ய வேண்டும்.ஏனெனில் உயர் வகுப்பினர் தங்களுக்கு உள்ள வசதி வாய்ப்புகளைக்கொண்டு அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எழுதி இதைவிடச் சிறந்த கல்வி நிலையங்களுக்கு சென்று விடுகின்றனர். அல்லது பணம் கொடுத்து விரும்பிய கல்வி நிலையத்தில் சேர்ந்து விடுகின்றனர். உயர் கல்வியை இப்போதுதான் நுகரும் SC மாணவர்களுக்கு இவ்வாய்ப்புகள் இல்லை. குறைந்த பட்சம் தமிழக உயர் கல்வி எண்ணிக்கையில் சம எண்ணிக்கையில் வர வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். எதிர் காலத்தில் பி.ப வகுப்பினருக்கு சமமாக வர வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
Wednesday, June 15, 2011
சமச்சீர் கல்வி தேவையா தேவை இல்லையா
சமச்சீர் கல்வி தேவையா தேவை இல்லையா என்பதற்கு அரசு நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டும் இருக்கும் வேளையில் தமிழகத்தில் நடுத்தர வர்க்கமும் நகர்ப்புற பெற்றோரும் சமச்சீர் கல்வி தேவை இல்லையென்ற கருத்துக்களை கொண்டுள்ளனர். பள்ளிகளின் வாயிலில் பெற்றோர்கள் பேசும் பேச்சுக்களும் விவாதிக்கும் போக்கும் சமச்சீர் கல்விக்கு எதிரானதாகவே உள்ளது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் சமச்சீர் கல்வி தரம் குறைந்தது, அகில இந்திய அளவில் போட்டித் தேர்வுகள் எழுத தரம் மிக்க கடுமையான பாடத்திட்டம் தேவை என அவர்கள் கருதுகின்றனர். சமச்சீர் என்ற பெயரில் கிராமப்புற ஊராட்சி பள்ளிகளில் பயிலும் ஏழை விவசாய மாணவர்களுக்கு ஏற்ப பாடத்திட்டம் அமைந்துள்ளதாக கருதுகின்றனர், இதை வைத்துக்கொண்டு போட்டி போடமுடியாது, அறிவு வளர்ச்சியும் குறைவாகவே இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். உண்மையில் நகர்ப்புறங்களில் ஓர் வாக்கெடுப்பு நடத்தினால் சமச்சீர் கல்விக்கு எதிராகவே இவர்கள் வாக்களிப்பார்கள்.தரம் குறைந்த கல்வியை செலவு செய்து கற்ப்பிக்க வேண்டுமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது. இந்த காரணத்திற்காகவே CBSE பள்ளிகளுக்கு தமது குழந்தைகளை படிக்க வைக்க படாதபாடு படுகின்றனர். நிறைய மெட்ரிக் பள்ளிகள் CBSE பாடமுறைக்கு மாற விண்ணப்பிக்க தொடங்கிவிட்டன. பெற்றோரின் அங்கலாய்ப்பை காசாக மாற்றிக்கொள்ள மெட்ரிக் பள்ளிகள் தயாரகி விட்டன. தற்போது தமிழகத்தில் உள்ள 9582 பள்ளிகளில் 3474 மெட்ரிக் பள்ளிகளும் 154 CBSE பள்ளிகளும் உள்ளன. இவற்றை நடத்தும் கல்வி வியாபாரிகள் இத்திட்டத்திற்கு எதிராகவே உள்ளனர் அவர்கள் சமச்சீர் கல்வி தரமற்றது என்ற செய்தியை இக்கல்வி நடைமுறைக்கு வரும் முன்னர் இருந்தே பரப்புரை செய்து வருகின்றனர்.ஏனென்றால் ரூ.20,000/- கல்விக்கட்டணமாக வசூலிக்கும் இவர்களின் பாடத்திட்டமும் ரூ.500/- வாங்கும் அரசுப் பள்ளியின் பாடத்திட்டமும் ஒன்று என்றால், நடுத்தர மக்கள் அரசுப்பள்ளிகளை நோக்கியே செல்வார்கள் இதனால் தமது கல்விக் கடைகளை மூட நேரிடும் என்பது இவர்களின் அச்சம்.
சமச்சீர் கல்வியில் சரியோ தவறோ ஆனால் சமமற்ற கல்வி நிலையில் இருந்து சமமான ஓர் நிலைக்கு செல்ல மக்கள் எதிர்ப்பதற்கு காரணம் சாதி ஏற்றத்தாழ்வுகளை கடைப்பிடித்து, தம்மை ஆதிக்கம் செய்பவனைப்பற்றி கவலைப்படாமல் சாதி நிலையில் தமக்கு கீழாக இருப்பவனை சமமாக கருதாத ஆதிக்க சாதி தன்மையும் ஒரு காரணம். ஏனென்றால் கல்வியின் தரத்தைப் பற்றி பேசும் பெற்றோர்கள் 10ஆம் வகுப்பு வரை மெட்ரிக்கும் CBSE யும் படிக்க வைத்துவிட்டு மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்பதற்காகவே +1,+2 வகுப்புகளில் மாநிலக் கல்விப் பாடத்திட்டத்திற்கு தாவுகிறார்கள் இவர்கள் கூற்றின்படி தரமாகவே இருந்தும் மெட்ரிக்கும் CBSE யும் படிக்க வைக்கததற்கு காரணம் மதிப்பெண்களே மாநிலக் கல்விப் பாடத்திட்டத்தில் கூடுதல் மதிப்பெண்கள் பெறலாம். தரமற்றதாக இருந்தாலும் ஏழை கிராமப்புற மாணவன் படிக்கும் மாநிலக் கல்விப் பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் இங்கு மட்டும் தரம், நல்ல பாடத்திட்டம் போன்றவைகள் அடிபட்டுவிடுகிறது. அப்படியே சமச்சீர் கல்வித்திட்டத்தில் குறைகள் இருந்தாலும் அவற்றை வருகிற ஆண்டுகளில் அரசிடம் போராடி சரி செய்து கொள்ளலாம் என்ற மனநிலை கிஞ்சித்தும் இவர்களிடம் இல்லை. அனைவருக்கும் சமமான ஒன்று என்று இருக்கக்கூடாது எல்லாவற்றிலும் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கவேண்டும் என்ற மனநிலை மேலோங்கும் மக்களிடம் இதைத்தவிர எதை எதிர் பார்க்க முடியும்.

Tuesday, June 14, 2011
யார் இந்த சிவசங்கர மேனன்கள்?
யார் இந்த சிவசங்கர மேனன்கள்?
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது சரியல்ல என்று தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்ததற்காக சென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் பாராட்டி 13.6.2011 திங்கட்கிழமையன்று பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது அதில் இந்திய பொதுவுடமைக்கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் தோழர்.சி.மகேந்திரன் பேசியதாவது.
"இந்தியாவில் பிரதமருக்கு அடுத்த நிலையில் Protocall எனப்படும் அரசு மரியாதை உள்ளவர் மாநில முதல்வரே ஆவார். ஆனால் அயல்நாடான இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாக இலங்கை அதிபர்களிடம் எனன விவகாரங்களை பேசப்போகிறார்கள் என்ன ஒப்பந்தம் போடப்போகிறார்கள் என்பதை முதல்வரிடம் விவாதிக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வரவேண்டுமே ஒழிய சிவசங்கர மேனன் போன்ற அதிகாரிகள் அல்ல. மேலும் இலங்கை அதிபர்களிடம் பேச மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களே செல்லவேண்டும். பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டின் அதிபர்களிடம் வெளியுறவு அமைச்சர்களே பேசுகின்றார்கள் அல்லது பிரதமர் பேசுகின்றார் ஆனால் இலங்கைக்கு மட்டும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேசுகின்றார்ள் அதுவும் தமிழருக்கு எதிரான கருத்து உள்ள அதிகாரிகள் பேசுகின்றார்கள் அவர்கள் தமிழக மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்காமல் தமிழகத்திலும் அயல் நாடுகளில் தமிழர்கள் நடத்தும் போராட்டங்களை சற்றும் மதிக்காமல் இலங்கை அதிபர்களுக்கு வால் பிடிக்கும் வேலையை செய்கின்றார்கள். தமிழர்களுக்கு எதிராக நிலை எடுக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, கொள்கை முடிவுகளில் தமிழர்களுக்கு பாதகமாக நிலை எடுக்கும் இந்த சிவசங்கர மேனன்களை இனி வரும் காலங்களில் நாம் அனுமதிக்கக்கூடாது. தமிழக முதல்வரும் அவர்களை சந்திக்க மறுக்க வேண்டும்" என்று சி.மகேந்திரர்ன் உரையாற்றினார் அவரின் உரை நல்ல வரவேற்பை பெற்றது.

Subscribe to:
Posts (Atom)